Wednesday, 24 August 2016


இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.


1. இராஜராஜன் காலத்து நாட்டுப் பிரிவு - மண்டலங்கள்.

2. அதிராசராச மண்டலம் (சேலம் மாவட்ட்த் தென்பகுதி - கோவை - திருச்சி மாவட்டங்கள்).

3. இராசராசப் பாண்டி மண்டலம் (மதுரை - இராமநாதபுரம் - திருநெல்வேலி மாவட்டங்கள்).

4. செயங்கொண்ட சோழ மண்டலம் (தென்னார்க்காடு - செங்கற்பட்டு - வடவார்க்காடு - சித்னர் மாவட்டங்கள்).

5. சோழ மண்டலம் (தஞ்சாவூர் மாவட்டம் - திருச்சி மாவட்ட கிழக்குப் பகுதி).

6. நிகரிலி சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - பெல்லாரி மாவட்டம்).

7. மலை மண்டலம் (திருவாங்கூர் - கொச்சி உள்ளடங்கிய சேரநாட்டு மேற்கு கடற்கரைப் பகுதி).

8. மும்முடிச் சோழ மண்டலம் (மைவரின் தென்பகுதி - சேலம் மாவட்ட வடபகுதி).

9. வேங்கை மண்டலம் (கிருட்டின - கோதாவரி ஆறுகளுக்கு இடைப்பட்ட கீழைச் சாளுக்கிய நாடு).

பேராட்சி முறையில் மன்னனுக்குத் துணை செய்த அலுவலர்கள்..

1. உத்திர மந்திரி
2. பெருந்தர அதிகாரிகள்
3. திருமந்திர ஓலை
4. திருமந்திர ஓலை நாயகம்
5. ஒப்பிட்டுப் புகுந்த கேழ்வி
6. வரியிலிடு
7. காடுவெட்டி
8. உடன் கூட்டத்து அதிகாரி
9. அனுக்கத் தொண்டன்
10. நடுவிருக்கை
11. விடையில் அதிகாரி
12. உள்வரி திணைக்களத்துக் கண்காணி
13. புரவரித் திணைக்களம்
14. புரவரி திணைக்களத்து நாயகம்
15. வரிப் பொத்தகம்
16. முகவெட்டி
17. வரிப்பொத்தகக் கணக்கு
18. வரியிலிடு புரவரி திணைக்களத்து நாயகம்
19. கடமை எழுதுவோன்
20. பட்டோலை
21. ராகாரிய ஆராய்ச்சி
22. விதிசெய்

 தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.


Monday, 15 August 2016

தம்பி... 
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா 
மறக்காம போன உடனே எடுத்து 
பீஸ் கட்டிரு... 
--- இது அப்பா. 

கண்ணு... 
மறக்காம போய் சேர்ந்ததும் 
ஒரு போன் போட்ரு 
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு... 
--- இது அம்மா. 

ஏ ராசா.. 
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா 
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா .. 
--- இது பாட்டி. 

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா 
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும் 
--- இது தாத்தா. 

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா 
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா 
--- இது அண்ணன். 

மறக்காம புது பேனா வாங்கிக்க 
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்.. 
--- இது தங்கச்சி. 

மறக்காம போன உடனே 
மஞ்ச பையை தொறந்து பாரு 
நான் சேத்து வச்ச காச உன் செலவுக்கு வச்சிருக்கேன்.... 
--- இது தம்பி. 

மறக்காம போன உடனே 
உன் பொறந்த நாளைக்கு புது சட்டை வாங்கிகப்பா... 
நான் தையல் தச்ச காச 
உனக்காக வச்சிருக்கேன்.... 
--- இது அக்கா. 

அன்று... 
இதை எல்லாவற்றையும் 
மறக்காமல் செய்துவிட்டோம்... 

இன்று.... 
இதை சொன்ன எல்லோரையும் 
மறந்து விட்டோம்...
ஆள வந்தவர்கள் 
அடிமைகளாக திரும்பி போனார்கள்,
அவர்கள் ஆயுததால் அடிமை செய்தனர்,
நாம் அன்பால் அடிமை செய்தோம்...!
நேற்றுவரை நாங்கள் அடிமை,
இன்று முதல் நீங்கள் அடிமை.
ஹ......ஹா....!
அகிம்சை தான்டா நாங்கள் உங்களுக்கு செய்த
இம்சையே.....!
அன்னியனே வெளியேறு 
அடிமைப்பட்டது போதும் 
நாம் ஆள வேண்டும் 
நமக்காக நம் நாட்டுக்காக 

ஆண்டது போதும் அகன்று விடு 
ஆள்வது எம்கையில் 
அடித்தாலும் பிடித்தாலும் 
அண்ணன் தம்பி நாங்கள் 
என்றோம் வென்றோம் 

இன்று தெரிகிறது 
ஏன் இந்த வெற்றி என்று 
சு என்றால் நல்ல 
தந்திரம் என்றால் சிக்கல் என்று 
புரிந்து தான் வாழ்கின்றோம் 
முட்டாள்கள் நாம் என்று 

உலகம் புரிந்து கொள்ளட்டும் 
தன்னைப் புரிந்து கொள்ள 
தகுதியில் நாம் இல்லை என்று 
இருந்தும் வாழ்த்துவோம் 
சுதந்திரம் பெற்றுக் கொடுத்த 
இந்திய பெரு மக்களை தலைவர்களை 
அவர்களை வாழ்த்தும் புண்ணியம் ஆவது 
நம் தலைமுறை காத்திடட்டும்
செல்லும் இடமெல்லாம் 
வீசுகிறது பிண வாடை..! 

இதோ இவ்விடத்தில் தான் 
பத்தியம் இருந்து பெற்ற 
என் பிஞ்சு குழந்தையின் 
பச்சை உடல் சிதறிக் கிடந்தது..! 

அதோ அவ்விடத்தில் தான் 
எங்கோ இருந்து கொண்டு வரப்பட்ட 
என் சகோதரிகளின் 
ஆடைகள் அற்ற உடல்கள் கிடத்தப் பட்டிருந்தன ..! 

அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல ..! 
எங்கெங்கும் சிதறிக் கிடந்தன 
என் சகோதரர்களின் உடல்கள்..! 

இங்கே ஒவ்வொரு பூவிலிருந்தும் 
வீசுகின்றது 
பிண வாடை..! 

அழகாய் பூத்திருக்கும் இந்த ரத்த நிற ரோஜாக்கள் 
நினைவு படுத்துகின்றன 
குழந்தைகளின் புன் சிரிப்பையும் , கூடவே 
அவற்றின் மரித்துப் போன உடல்களையும்..! 

எங்கள் தமிழின உடல்களை புதைத்த 
அத்தனை இடங்களிலும் 
அதன் அகோரத்தை மறைக்க 
பூந்தோட்டங்களையும் 
இன்ன பிறவற்றினையும் 
நீங்கள் அமைத்து விடலாம்..! 

பூக்களின் வாசத்தாலோ 
இன்ன பிறவற்றினாலோ 
எளிதில் மறைத்து விட முடியாது 
பிண வாடையை..! 

நாங்கள் வெறும் வாசமல்ல 
தீர்ந்து போய்விட...!

Sample Text

Blog Archive

Powered by Blogger.

Popular Posts

Text Widget