மணி மேனேஜர் Ex என்பது தனிநப பண மேலாண்மைக்காக உலக அளவில் பரவலாய் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள் (free open source software).
இச்செயலி மூலம் தனிநபர் எவரும் தன்னுடைய ஒவ்வொரு வரவு செலவையும் கணக்கில் கொள்ள இயலும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (Budget) அமைத்து, வரவும் செலவுகளும் அத்திட்டத்துள் செயல்படுகின்றதா (Budget Performance) என்பதை கண்காணிக்க இயலும்.
இதன் அறிக்கைகள்(Reports) வசதி மூலம், குறிப்பிட்ட கால வரையில் நாம் செலவிடும் பணம் எங்கு, எவருக்கு, எவ்வளவு செல்கிறது என்பதை தெளிவாக அறிந்திட இயலும்.
மேலும், இச்செயலியில் பங்கு சந்தை, வாகனம், நிலம், நகை இதர முதலீடுகளையும் அதன் விவரங்களையும் இட்டு அதன் தற்போதைய மதிப்பினை கணக்கிட இயலும்.
மொத்தத்தில் இந்த செயலி எந்த ஒரு கணத்திலும் நம் நிதி/சேமிப்பின் தற்போதைய மதிப்பு என்ன என்பதை அறிந்திடவும், தேவையற்ற செலவுகளை குறைத்து, தேவையானவற்றில் சரியான வழியில் செலவிடவும் திட்டமிட/கண்காணிக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். website: http://thamizha.com
# மணி மேனேஜர் (free open source software).
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment